அருட்தந்தை கில்லேறியன் வேதநாயகம் அமதி அடிகளார்

வேதா

யாழ். மாகாண அமலமரித்தியாகிகளின் மூத்த குருவும் முன்னாள் மாகாண முதல்வரும் இலங்கை மற்றும் தென் இந்தியாவில் நன்கு அறியப்பட்ட கட்டடக் கலைஞருமாகிய “வேதா” என்று அன்பாக அழைக்கப்படும் அருட்தந்தை கில்லேறியன் வேதநாயகம் அமதி அடிகளார் கடந்த (29.11.2018) வியாழக்கிழமை இரவு யாழ். போதனா வைத்தியசாலையில் காலமாகிவிட்டார்.
யாழ்ப்பாணம் குருநகர் புதுமைமாதா ஆலயத்தைச் சேர்ந்த அருட்தந்தை அவர்கள் 1957ஆம் ஆண்டிலே குருவாக திருநிலைப்படுத்தப்பட்டார். கடந்த 61 ஆண்டுகளாக இலங்கை, இந்தியா, பிலிப்பைன்ஸ் மற்றும் ஆஸ்திரேலியா நாடுகளில் இறைபணியாற்றினார். சிறந்த கட்டட கலைஞரான அருட்தந்தை கீழைத்தேச பாரம்பரிய கட்டட கலையினூடாக மறைத்தூது பணியாற்றினார்.
அருட்தந்தையின் பூதவுடல் யாழ்ப்பாணம், கொழும்புத்துறை, சுவாமியார் வீதியில் உள்ள புனித டி மசெனட் ஆலயத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. இரங்கல் திருப்பலியானது எதிர்வரும் (03.12.2018) திங்கட்கிழமை பி.ப. 3.00 மணிக்கு யாழ்ப்பாணம் புனித மரியன்னை பேராலயத்தில் ஒப்புக்கொடுக்கப் படும். இந்த அறி­வித்­தலை உற்­றார், உற­வி­னர், நண்­பர்­கள் அனை­வ­ரும் ஏற்­றுக் ­கொள்­ள­வும்.

காலமான திகதி:
29.11.2018
இறுதிக் கிரியை நடைபெறும் திகதி:
03.12.2018
தகவல்: Mr. A. Jesuthasan Mrs. Arulselvi Paskaran Viber - 0044 790 676 3810
தொடர்பு: 076 532 3643