திருமதி மனோன்மணி செல்வஞானபிள்ளை

உரும்பிராய் கிழக்கைப் பிறப் பிடமாகவும் உரும்பிராய் வடக்கை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி மனோன்மணி செல்வஞான பிள்ளை நேற்று (03.12.2018) திங்கட்கிழமை காலமானார்.
அன்னார் காலஞ்சென்றவர் களான செல்லப்பா – இலட்சுமிப் பிள்ளை தம்பதிகளின் புதல்வியும் காலஞ்சென்றவர்களான சுப்பிர மணியம் – சின்னப்பிள்ளை தம்பதி களின் மருமகளும் செல்வஞான பிள்ளையின் அன்பு மனைவியும் காலஞ்சென்ற பஞ்சலிங்கம் மற்றும் சோதிமணி, சற்குண மணி, காலஞ்சென்றவர்களான தனபாலசிங்கம், குணமணி ஆகியோரின் அன்புச் சகோதரியும் கங்காதேவி, கோகலிநாதன், வள்ளி வடவைநாயகி, உத்தமிஉமையாள், சிவசக்தி ஆகியோரின் அன்புத் தாயாரும் காலஞ் சென்றவர்களான பரமசிவம், பத்மநாதன், சிவபாக்கியம் மற்றும் இந்திரன், காந்திதாஸ் ஆகியோரின் அன்பு மாமியாரும் அருள்நம்பி, அருள்பரன், காலஞ்சென்ற அருள்வாணி மற்றும் அருள்ஈசன், தினுஷா, தாரணி, ரூபிகா, சியாமளா, நிறஞ்சிகா, காயத்திரி, மயூரன், கௌசிகா ஆகியோரின் அன்புப் பேர்த்தியும் மிதுஜன், மிதுஜா, அக்ஸ்சவி, அக்கீசன், அகிலதாஸ், சாதுஜன், பரணிதா, கௌசிகா, அஜே, அனுஷ்கா, நிறோசன் ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.
அன்­னா­ரின் இறு­திக்­கி­ரி­யை­கள் இன்று (04.12.2018) செவ்வாய்க் கிழமை பி.ப. 04.00 மணி­க்கு ஊரெழு கிழக்கிலுள்ள மகளின் இல்­லத்­தில் நடை­பெற்று பூத­வு­டல் தகனக்கிரியைக்காக ஊரெழு பொக்கனை இந்து மயா­னத்­திற்கு எடுத்­துச்­செல்­லப்­ப­டும்.
இந்த அறி­வித்­தலை உற்­றார், உற­வி­னர், நண்­பர்­கள் அனை­வ­ரும் ஏற்­றுக் ­கொள்­ள­வும்.

பிறப்பிடம்:
உரும்பிராய் கிழக்கு
வசிப்பிடம்:
உரும்பிராய் வடக்கு
காலமான திகதி:
03.12.2018
இறுதிக் கிரியை நடைபெறும் திகதி:
04.12.2018
தகவல்: குடும்பத்தினர்.
முகவரி: வாணி இல்லம், ஊரெழு கிழக்கு, சுன்னாகம்.
தொடர்பு: 021 205 4719