விஸ்வலிங்கம் தர்மபாலசிங்கம்
(உரிமையாளர் - கல்யாணி தாம்பூலம், மல்லாவி)
காரைநகர் வேதரடைப்பைப் பிறப்பிடமாகவும் மூளாய் வீதி, வட்டுக் கோட்டையை வசிப்பிடமாகவும் கொண்ட விஸ்வலிங்கம் தர்மபால சிங்கம் நேற்று (09.02.2019) சனிக்கிழமை காலமானார்.
அன்னார் காலஞ்சென்றவர்க ளான விஸ்வலிங்கம் – மாணிக்கம் தம்பதிகளின் அன்பு மகனும் காலஞ்சென்றவர்களான சுப்பிர மணியம் – பொன்னம்மா தம்பதி களின் அன்பு மருமகனும் விக்னேஸ்வரியின் அன்புக் கணவரும் காலஞ்சென்றவர்களான அருளானந்தம் பாலசுப்பிரமணியம், கனகேந்திரம், இராஜேஸ்வரன் மற்றும் சிவ பாக்கியம் ஆகியோரின் அன்புச் சகோதரனும் காலஞ்சென்ற தயாபரன், பரஞ்சோதி, மாலினி (கூட்டுறவு அபிவிருத்தி உத்தியோகத்தர், யாழ்ப்பாணம்), பாஸ்கரன் (கல்யாணி தாம்பூலம், மல்லாவி) ஆகியோரின் பாசமிகு தந்தையும் தயாகரனின் (கூட்டுறவு அபிவிருத்தி உத்தியோகத்தர், யாழ்ப்பாணம்) அன்பு மாமனாரும் ரம்மியா, மதுஷ் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் இன்று (10.02.2019) ஞாயிற்றுக்கிழமை மூளாய் வீதி, வட்டுக்கோட்டையில் உள்ள அவரது இல்லத்தில் நண்பகல் 12.00 மணிக்கு நடைபெற்று பூதவுடல் தகனக்கிரியைக்காக வழுக்கையாறு இந்து மயானத்திற்கு எடுத்துச் செல்லப்படும். இந்த அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.