கந்தையா குமாரசாமி

(ஓய்வுபெற்ற இராணுவ உத்தியோகத்தர்)

கோப்பாயைப் பிறப்பிடமாகவும் பன்னாலையை வசிப்பிடமாகவும் கொண்ட கந்தையா குமாரசாமி நேற்று (25.03.2019) திங்கட்கிழமை இறைவனடி சேர்ந்தார்.
அன்னார் காலஞ்சென்றவர்களான கந்தையா – பொன்னம்மா தம்பதிகளின் அன்பு மகனும் காலஞ்சென்றவர்களான ஆறுமுகம் – செல்லமுத்து தம்பதிகளின் அன்பு மருமகனும் செல்வநாயகியின் பாசமிகு கணவரும் உஷா, உதயகுமாரி, தயாபரன் ஆகியோரின் பாசமிகு தந்தையாரும் பாலச்சந்திரன், வாசுதேவன், பாலசுகந்தினி ஆகியோரின் அன்பு மாமனாரும் தனுஷியா, நிரோஜி, நிவேதா, நிதுலா, வைஷ்ணவி, சங்கவி ஆகியோரின் அன்புப் பேரனும் காலஞ்சென்ற நடராஜலிங்கம், நாகம்மா ஆகியோரின் அன்புச் சகோதரரும் காலஞ்சென்ற சரஸ்வதி, பாலசுப்பிரமணியம் ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
அன்­னா­ரின் இறு­திக்­கி­ரி­யை­கள் நாளை (27.03.2019) புதன்கிழமை மு.ப. 10.00 மணிக்கு அவரது இல்லத்தில் இடம்பெற்று பூதவுடல் தகனக்கிரியைக்காக கீரிமலை செம்பொன் வாய்க்கால் இந்து மயானத்திற்கு எடுத்துச் செல்லப்படும். இந்த அறி­வித்­தலை உற்­றார், உற­வி­னர், நண்­பர்­கள் அனை­வ­ரும் ஏற்­றுக் ­கொள்­ள­வும்.

நெருஞ்சியோலை,
பன்னாலை, தெல்லிப்பழை.

தகவல்:
குடும்பத்தினர்.