சொலமன் டானியல் இராசையா

வட்டுக்கோட்டையைப் பிறப்பிடமாகவும் யாழ்ப்பா ணக்கல்லூரியில் ஆய்வு கூட உதவியாளராக கடமையாற்றிய சொலமன் டானியல் இராசையா நேற்று (05.04.2019) வெள்ளிக்கிழமை காலமானார்.
அன்னார் காலஞ்சென்ற கென்றி சொலமன் – ஞானம்மா தம்பதியினரின் மகனும் காலஞ்சென்ற அமிர்தநாயகியின் அன்புக்கணவரும் காலஞ்சென்ற செல்வராசாவின் அன்புச் சகோதரனும் தவமணியின் மைத்துனரும் றஜனி, அல்வின், நிரோஷினி, றவீந்திரறாஜ், சுறேந்திர றாஜ், ஆகியோரின் அன்புத் தந்தையும் ஜெயந்தி, அன்ரனி ஆகியோரின் மாமனாரும் சாந்தினி செல்வசீலன், ஜெயசீலன், ஜெசிந்தினி ஆகியோரின் சிறியதந்தையும் ஜீவமணி, அன்ரன் ஆகியோரின் மாமனாரும் ஆரோன், ஏனோக், ஜெசிக்கா, ஆரணி ஆகியோரி்ன் அன்பு பேரனுமாவார்.
அன்னாரின் அடக்க ஆராதனை அவரின் இல்லத்தில் இன்று (06.04.2019) சனிக்கிழமை மாலை 4.00 மணியளவில் நடைபெற்று பூதவுடல் நல்லடக்கத்திற்காக வட்டுக்கோட்டை சேமக்காலைக்கு எடுத்துச்செல்லப்படும்

தகவல்

குடும்பத்தினர்