சக்கரியாஸ் ஈன்ஸ்ரின் ஜெனிங்தாஸ்

நவாலியைப்பிறப்பிடமாகவும் கொழும்பை வசி்ப்பிடமாகவும் கொண்ட சக்கரியாஸ் ஈன்ஸ்ரின் ஜெனிங்தாஸ் நேற்று முன்தினம் (13.04.2019) சனிக்கிழமை காலமானார்.
அன்னார் ஜெனியின் அன்புக் கணவரும் ஜமிசன், மெலிசா ஆகியோரின் அன்புத் தந்தையும் சக்கரியாஸ் – றெஜினா தம்பதியினரின் மூத்த அன்பு மகனும் காலஞ் சென்றவரான அன்ரன் மற்றும் றதி தம்பதிகளின் அன்பு மருமகனும் கருணைதாஸ் (ஆசிரியர், யாழ்ப்பாணக் கல்லூரி – வட்டுக்கோட்்டை), பாலதாஸ் (ஆசிரியர், வ/வவுனியா தமிழ் மத்திய ம.வி) காலஞ்சென்ற ஜீவதாஸ் ஆகியோரின் அன்புச் சகோதரரும், ஜடா (லண்டன்), அனு (மாணவி, உடுவில் மகளிர் கல்லூரி), காலஞ்சென்ற றெஜினோல்ட் ஆகியோரின் அன்பு அத்தானும் ஜெயசிறி (ஆசிரியை, சென்மேரிஸ் கல்லூரி -ஊர்காவற்றுறை), நளாயினி (ஆசிரியை. வவுனியா பெரிய கோமரசன் குளம் ம.வி), வசந்தராசன் (லண்டன்) ஆகியோரின் அன்பு மைத்துனனும் ஜனுஸ், கமிஸ், அரிஸ், சந்தோஷ், ஸ்ரெனிஷா, வருண், வர்ஷா ஆகியோரின் பெரியப்பாவும் ஆவார்.
அன்னாரின் இறுதி இரங்கல் திருப்பலி இன்று (15.04.2019) திங்கட்கிழமை பி.ப 4.00 மணியளவில் நவாலி சென்பீற்றறேர்ஸ் தேவாலயத்தில் ஒப்புக்கொடுக்கப்பட்டு பூதவுடல் நவாலி சேமக்காலையில் நல்லடக்கம் செய்யப்படும் இந்த அறி­வித்­தலை உற்­றார், உற­வி­னர், நண்­பர்­கள் அனை­வ­ரும் ஏற்­றுக் ­கொள்­ள­வும்.

தகவல்

குடும்பத்தினர்

முகவரி

முருகமூர்த்தி கோவில் வீதி,
நவாலி கிழக்கு, மானிப்பாய்

தொலைபேசி இலக்கம்

077 440 5917