திருமதி சிவபாக்கியம்(செம்பகம்) இராமலிங்கம்

புங்குடுதீவு 2 ஆம் வட்டாரம் ஆஸ்பத்திரி வீதி யைப் பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் காரைநகர் தங்கோடை யை தற்காலிக வசிப்பிட மாகவும் கொண்ட திருமதி சிவபாக்கியம் (செம்பகம்) இராமலிங்கம் நேற்று (11.05.2019) சனிக் கிழமை காலமானார்.
அன்னார் காலஞ் சென்ற கனகசபை சின்னம்மா தம்பதியினரின் அன்பு மகளும் காலஞ்சென்ற நாகநாதர் செல்லம்மா தம்பதியினரின் மருமகளும் காலஞ்சென்ற இராமலிங்கத்தின் அன்பு மனைவியும் நிர்மலா தேவி,கெங்காதரன் ஆகியோரின் தாயாரும் காலஞ்சென்ற பொன்னம்பலம் மற்றும் சிவாஜினி ஆகியோரின் மாமியாரும் ஜெயக்குமார், வைஸ்ணவி, டிலூசியா, அபினயா ஆகியோரின் அன்பு பேர்த்தியுமாவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் அவரது இல்லத்தில் இன்று (12.05.2019) ஞாயிற்றுக்கிழமை நண்பகல் 12 .00 மணியளவில் நடைபெற்று பூதவுடல் தகனக்கிரியைக்காக காரைநகர் சாம்பலோடை இந்துமயானத்திற்கு எடுத்துச் செல்லப்படும் . இந்த அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.

தகவல்

குடும்பத்தினர்

தொடர்பு இலக்கம்

076 485 1257

077 918 4391