திருமதி கமலாதேவி கனகநாயகம்

மலேசியாவைப் பிறப்பிடமாகவும், நாவலர் வீதி, யாழ்ப்பாணத்தை வசிப்பிடமாகவும், சிவன் கோவில் வீதி, திருநெல்வேலியை வாழ்விடமாகவும் கொண்ட திருமதி கமலாதேவி கனகநாயகம் 17.05.2019 வெள்ளிக்கிழமை காலமானார்.
அன்னார் காலஞ்சென்றவர்களான மலாயன் பென்சனியர் பொன்னையா நாகரத்தினம் தம்பதியரின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான நாகலிங்கம் பூரணம் தம்பதியரின் அன்பு மருமகளும், காலஞ்சென்ற கனகநாயகத்தின் அன்பு மனைவியும், ரபீந்திரன் (நெதர்லாந்து), சாந்தினி (கனடா), பாமினி (கனடா) ஆகியோரின் அன்புத் தாயும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் நாளை (20.05.2019) திங்கட்கிழமை அன்னாரின் இல்லத்தில் நடைபெற்று பூதவுடல் தகனக்கிரியைகளுக்காக முற்பகல் 10.00 மணிக்கு கொக்குவில் இந்துமயானத்துக்கு எடுத்துச் செல்லப்படும்.
இந்த அறிவித்தலை உற்றார், உறவினர்கள், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:

குடும்பத்தினர்.

இல.5, சிவன் கோவில் வீதி,
திருநெல்வேலி தெற்கு.

021 222 3449