திருமதி சிவசுந்தரம் பாக்கியவதி

பிறப்பு – 29.05.1951                    இறப்பு – 06.06.2019

மன்னார் உயிலங்குளத்தைப் பிறப்பிடமாகவும் 49, சின்னாலங்கண்டு வீதி, அரியாலையை நிரந்தர வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி சிவசுந்தரம் பாக்கியவதி (பவா) 06.06.2019 வியாழக்கிழமை காலமானார்.
அன்னார் காலஞ்சென்ற வேலுப்பிள்ளை மற்றும் மீனாட்சி தம்பதிகளின் அன்பு மகளும் காலஞ்சென்றவர்களான சின்னத்தம்பி – பார்வதிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும் சிவசுந்தரத்தின் அன்பு மனைவியும் தவலட்சுமி, பாலகிருஸ்ணன், இரத்தினபூவதி, திலகவதி (ஆசிரியை – புத்தளம்), கிருஸ்ணவேணி ஆகியோரின் அன்புச் சகோதரியும் காலஞ்சென்றவர்களான தங்கலட்சுமி, ஆனந்த சுந்தரம், பாலசுந்தரம் மற்றும் யோகம்மா, தங்கராசா, யோகாம்பிகை, சிவநாதன், ஜெகதீஸ்வரன் ஆகியோரின் அன்பு மைத்துனியும் நந்தரூபன், சசிரூபன் (யாழ் தபாலகம்), காலஞ்சென்ற காந்தரூபன் மற்றும் சிவதர்சினி, தசரதரூபன் (கபில்) ஆகியோரின் அன்புத் தாயாரும் ராகுலன், வதனி, மைதிலி ஆகியோரின் பாசமிகு மாமியாரும் அபிஷேக், ஜஸ்வின், டினுசாந், காவியா, யதுர்சனா, டிசாந், ரஜீஷன், ஜகிதன் ஆகியோரின் பேர்த்தியுமாவார்.
அன்னாரது இறுதிக்கிரியைகள் இன்று (09.06.2019) ஞாயிற்றுக்கிழமை முற்பகல் 10.00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பூதவுடல் தகனக்கிரியைக்காக அரியாலை சித்துப்பாத்தி இந்துமயானத்துக்கு எடுத்துச் செல்லப்படும்.

தகவல்:
வே.திலகவதி (சகோதரி)

அரியாலை,
யாழ்ப்பாணம்.