சத்தியதேவி சிவபாலன்

சந்தைவீதி, உடுப்பிட்டியைப் பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட சத்தியதேவி சிவபாலன் 07.07.2019 ஞாயிற்றுக்கிழமை காலமாகிவிட்டார்.
அன்னார் காலஞ்சென்றவர்களான விஸ்வலிங்கம் –கமலாம்பிகை தம்பதிகளின் மகளும் காலஞ்சென்றவர்களான வைரமுத்து – யோகம்மா தம்பதிகளின் மருமகளும் காலஞ்சென்ற வை.சிவபாலனின் அன்பு மனைவியும் ஜெகன், ஜெயந்தன், ஜானுயா, ஜெசிந்தா ஆகியோரின் அன்புத் தாயாரும் சுசிதா, பிரேம்குமார், கவியரசன் ஆகியோரின் பாசமிகு மாமியாரும் நிதுஜன், தர்மியா, அயுசன், நிதுசன், கவின் ஆகியோரின் அன்புப் பேர்த்தியாரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும். இந்த அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்

குடும்பத்தினர்.

முகவரி

சந்தைவீதி,
உடுப்பிட்டி.